By: தி.சுப்ரமணிய தேசிகர்
தேவார இன்னிசைப் பயிற்சி
ஆசிரியர்: தி.சுப்ரமணிய
தேசிகர்
பதிப்பாசிரியர்: சிவாலயம்
ஜெ. மோகன்
தமிழன் தன் இசைத் தொன்மையை, பெருமையை, வளமையைப் பறைசாற்றிக் கொள்ள ஒரே சான்றாக இருப்பது தேவாரமே. 1300 ஆண்டுகளாக உலகத்திலேயே உயிரோடு உயிர்ப்போடு இருந்து வரும் ஒரே இசை மரபு தேவார இசைமரபே. அதனைப் பாடி அருளிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசு சுவாமிகள், சுந்தரமூர்த்திகள், மாணிக்கவாசகர் ஆகிய அருட்செல்வர்கள் பாடி வந்த அந்தப் பண்களின் அமைப்பிலேயே தொடர்ந்து பாடப் பெற வேண்டும் என்ற விருப்பம் தமிழ்ச் சைவவர் மட்டுமல்லாமல் தமிழர் அனைவருக்கும் உரியதன்றோ! அத்தகைய இசை மரபு மறைந்திடா வண்ணம் அதனை காலத்திற்கேற்றவாறு சுரப்படுத்தினர் சிலர். அதில் திருச்சி வானொலி நிலையத்தில் பணியாற்றிய சிவத்திரு. தி.சுப்ரமணிய தேசிகர் திருமுறைகளை பாடஞ் சொல்லிக் கொடுப்பதை வாய்ப்பாகப் பயன்படுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட தேவாரப் பாடல்களை சுரப்படுத்தினார். அவை வானொலி இதழில் அச்சில் வெளிவந்துது. அதனை சிவாலயம் நூலாக பதிப்பித்து ஆவணப் படுத்தியுள்ளது. தேவாரங்களை இசையோடு கற்பதற்கு இந்நூல் பேருதவி புரியும்.
By: உரையாசிரியர்: பேராசிரியர் மாசிலாமணி வயித்தியலிங்கன்
By: தணிகைமணி வ.சு. செங்கல்வராய பிள்ளை
By: உரையாசிரியர்: கோ.வடிவேலு செட்டியார்
By: ஸ்ரீ கயிலாய பரம்பரைத் திருவண்ணாமலை ஆதீனம் ஸ்ரீ அமுர்தலிங்கத் தம்பிரான்