By: இசைத் தமிழ் ஆராய்ச்சியாளர் குடந்தை சங்கீத வித்துவான் ப.சுந்தரேசன்
விபுலானந்த
அடிகளார் 'யாழ் நூலில் ' தான் செய்த இசை ஆராய்ச்சிகளைக் கூறி இனிச் செய்ய வேண்டிய பல
கருத்துகளையும் கூறி அவையாவும் இசையை நன்கு முறையாகப் பயின்ற சான்றோர்கள்
மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்கள். அதன் அடிப்படையில் 'யாழ் நூலில்' நன்கு பயிற்சியுடைய பண்ணாராய்ச்சி வித்தகர் ஆராய்ச்சிகளை
மேற்கொண்டார். அதன் விளைவாகவே "முதல் ஐந்திசைப் பண்கள்'
என்ற இந்நூல் உருவெடுத்தது.
இந்நூல் இசைத் தமிழ்த்
தோற்றத்தின் அடிப்படைக் கருத்தினை விளக்குகின்ற முறையில் அமைந்துள்ளது.நூலாசிரியர்,
இசைகள் முதலில் ஒன்றாகவும், பின்னர் மூன்றாகவும், தொடர்ந்து ஐந்தாகவும், ஏழாகவும் பரிணமித்து உள்ளதை தக்க சான்று காட்டி
நிறுவியுள்ளார். தாரம், குரல்,துத்தம், உழை, இளி என்பது முதல் ஐந்திசைப் பண்ணாகும். இந்த ஐந்திசைத்
தொகுதிகளே பண் உணர்ச்சி தருமென்பதை எடுத்துக்காட்டும் விதமாக பழம் பாடல்களுக்கு
இசைவடித்துத் தந்துள்ளது, இந்நூலுக்கு மேலும் அணிசேர்கிறது. தமிழிசைப் பற்றிய ஆய்விற்கு இந்நூல் பெரிதும் உதவும். சிவாலயத்தின்
செம்பதிப்பாக இவ் இசைநூல் வெளிவந்துள்ளது.
By: Translation: Thiruvachakamani K.M. BALASUBRAMANIAM
By: கலைமாமணி கவிஞர் சுப்பு ஆறுமுகம்
By: ஸ்ரீ கயிலாய பரம்பரைத் திருவண்ணாமலை ஆதீனம் ஸ்ரீ அமுர்தலிங்கத் தம்பிரான்
By: உரையாசிரியர்: கோ.வடிவேலு செட்டியார்