...

திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை

By: நூலாசிரியர்: மறைமலை அடிகளார் உரையாசிரியர்: அழகரடிகள்

350
Available Stock: 10

திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை

நூலாசிரியர்: மறைமலை அடிகளார்

உரையாசிரியர்: அழகரடிகள்

பதிப்பாசிரியர்: சிவாலயம் ஜெ. மோகன்

            தனித்தமிழ் அறிஞர், தமிழ் கடல் என்று போற்றப்படும் மறைமலை அடிகளார் தமிழ் கடலின் ஆழம் கண்டு அறிவு முத்தெடுத்தவர். அவர் அருளிச் செய்த மாலைகளில் ஒன்று "திருவொற்றி முருகர் மும்மணிக்கோவை". அடிகள் 15 வயது முதல் 21 வயது வரை சங்க இலக்கியம், நிகண்டுகள், திருவாசகம், கோவை, தொல்காப்பியம், திருக்குறள், நாலடியார் முதலிய பல்வேறு நூல்களை நெட்டுருச் செய்தவர்.

இருபத்தொரு வயதில் ஏற்பட்ட வயிற்றுப் பிணியால் ஒற்றியூரில் எழுந்தருளியுள்ள முருகக் கடவுள் முன்பு வேண்டி விண்ணப்பித்த பாடல்களே இத்திருவொற்றி முருகர் மும்மணிக்கோவை‌. இந்நூலினை அடிகளார் தம் 23ஆம் அகவையில் வெளியிட்டார். இந்நூலின் சிறப்பு அடிகளாரிடம் தமிழ் பயின்ற அழகரடிகளாகிய இளவழகனாரால் உரைசெய்யப்பட்டது. மூல நூல் ஆசிரியர் நூலுக்கு மாணாக்கரே உரைசெய்து வெளிவந்த சிறப்பு இந்நூலிற்கு மட்டுமே உண்டு. அதனுடன் ஆசிரியரால் பார்வையிடப் பெற்றுத் திருத்தமும் பெற்ற நூல் இது ஒன்றே! அத்தகு சிறப்பு வாய்ந்த இந்நூலினை 'அறிஞர்களின் ஞானச் செல்வங்களை ஆவணப்படுத்தும்' வகையில் சிவாலயம் இதனை செம்பதிப்பாக வெளியிட்டுள்ளது.

Related products

...
திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும்
Price: Rs. 2,200

By: உரையாசிரியர்: கோ.வடிவேலு செட்டியார்

...
ஓங்கு புகழ் ஒற்றியூர்
Price: Rs. 120

By: திருமந்திரத் திலகம் முனைவர் மா.கி.இரமணன்

...
சிவாலய தேவார ஒளிநெறி மற்றும் கட்டுரைகள்
Price: Rs. 17,230

By: தணிகைமணி வ.சு. செங்கல்வராய பிள்ளை

...
TIRUKKURAL
Price: Rs. 750

By: மொழிபெயர்ப்பும், உரையும் : திருவாசகமணி கே.எம்.பாலசுப்பிரமணியம்