By: கலைமாமணி கவிஞர் சுப்பு ஆறுமுகம்
திருக்குறள் அனுபவ உரை
ஆசிரியர்: கலைமாமணி
கவிஞர் சுப்பு ஆறுமுகம்
பதிப்பாசிரியர்: சிவாலயம்
ஜெ. மோகன்
திருக்குறளுக்கு பல உரைகள் எழுந்துள்ளன. கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்கள் தமிழ் முழுதறிந்த தகைமையாளர். இவர் திருக்குறளுக்கு தம் மனத்தை ஆசனமாக்கினார். ஓர் அளவுகோல் இல்லாமல் கைமுழம் போடும் ஒரு சிறிய அனுபவத்தின் குறளானந்தமே இந்த நூல். நீண்ட வாழ்வியல் அனுபவம் கொண்ட கவிஞர். தமிழோடும் திருக்குறளோடும் தான் பெற்ற அனுபவத்தை திறனாய்வு நூலாக மலரச் செய்திருப்பது தமிழுக்கு கிடைத்த நல்வரவாகும். தான் அனுபவித்த குறள் அனுபவத்துக்கு ஓர் உரையாக; அனுபவ வாசகமாக; அனுபவ இலக்கியமாக இந்நூல் அமையப்பெற்று இருக்கிறது. "தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை" என குறிப்பிட்டார் பாவேந்தர் பாரதிதாசன். அவரைப் போலவே அவருடைய மொழியில், "திருக்குறளுக்குத் தொண்டு செய்பவரும் செய்வதில்லை" என்கின்ற குறள் அனுபவக் கருத்தை மையமாக வைத்து படைக்கப்பட்ட "திருக்குறள் அனுபவ உரை" எனும் தலைப்பிலான கலைமாமணி கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்களின் நூலினை சிவாலயம் வெளியிட்டுள்ளது.
By: விபுலானந்த அடிகளார்
By: திருமதி ரேகா மணி
By: உரையாசிரியர் : சரவணப் பெருமாள் ஐயர்
By: முனைவர் சண்முக. செல்வகணபதி