By: உரையாசிரியர்: தமிழாகரர் பேராசிரியர் மாசிலாமணி வயித்தியலிங்கன்
ஸ்ரீ கச்சியப்ப முனிவர்
அருளிய பஞ்சாக்கர தேசிகர் அந்தாதி
உரையாசிரியர்: தமிழாகரர்
பேராசிரியர் மாசிலாமணி வயித்தியலிங்கன்
English translation by Professor
S.A.Sankara Narayanan
பதிப்பாசிரியர்: சிவாலயம்
ஜெ. மோகன்
பொதுவாக வெண்பாப் பாடுதல் புலவர்க்குப் புலி என்பர். கட்டளைக் கலித்துறை பாடுவது இன்னும் கடினம். வெண்டளையே முழுதும் விரவி நேர்முதலடி பதினாறு எழுத்தானும் நிரைமுதலடி பதினேழு எழுத்தானும் இயல்வது. அதுவும் அந்தாதியாகப் பாடுதல் இன்னும் கடினமே. எனினும் அந்தாதிகள் தமிழில் பன்னூறு உண்டு. நம் புலவர்களுக்கு இந்த வரையறை எல்லாம் கரும்பு கடிப்பது போல இனிமையானது. கச்சியப்பர் மிக எளிதாக இதனை கையாண்டு இருக்கிறார். நமச்சிவாய மூர்த்திகளைப் போற்றி "பஞ்சாக்கர தேசிகர் அந்தாதியை" கவிராட்சச கட்சியப்ப முனிவர் பாடியுள்ளார். 41 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நூலை மீள்பதிப்பு செய்ய வேண்டும் என விரும்பி சிவாலயம் அப்பணியை ஏற்றுக் கொண்டது. இந்நூலுக்கு தெளிவுரை தருவதற்கு பேராசிரியர் தமிழாகரர்.மா. வயித்தியலிங்கன் இசைந்தார். தமிழ் நூல் ஒன்றை பலரும் தமிழ்நாட்டுக்கு வெளியில் உள்ளவரும் அறிந்து கொள்ள வேண்டுமாயின் ஆங்கில மொழிபெயர்ப்பொன்று இருப்பின் பேருதவியாய் இருக்கும் என கருதி அதன்படி பேராசிரியர் S.A. சங்கரநாராயணன் அவர்கள் இந்நூலுக்கான ஆங்கிலப் பதிப்பையும் வழங்கியுள்ளார். ஸ்ரீ பஞ்சாக்கர தேசிகர் அந்தாதி மதுரம் ததும்பும் தமிழ் நடைக்கு ஓர் எடுத்துக்காட்டாய் விளங்குகிறது.
By: திருமதி ரேகா மணி
By: விபுலானந்த அடிகளார்
By: உரையாசிரியர் : சரவணப் பெருமாள் ஐயர்
By: பேராசிரியர் சாமி தியாகராஜன்