...

ஐயனார் வரலாறும் பிரபந்தத் திரட்டும்

By: பேராசிரியர் மாசிலாமணி வயித்தியலிங்கன்

₹ 425
Available Stock: 50

தமிழகத்தின் தொன்மைத் தெய்வம் ஐயனார் என்பதைப் பேராசிரியர் இந்நூலில் நிலைநாட்டுகிறார். சிற்றூர்தோறும் கோயில் கொண்டுள்ள ஐயனார் வழிபாடு நிலத்தெய்வம், நடுகல் தெய்வம்,புராணவழித் தெய்வம் என்னும் மூன்று நிலைகளில் ஒரு தெய்வ வழிபாடாக ஒன்றியிருப்பதைக் காட்டுவதோடு, ஐயனாரின் பெயர்களைப் பற்றிய ஆய்வுப் பனுவலாகவும் இந்நூல் திகழ்கிறது. பேராசிரியர் தம் மதிநுட்பம் விளங்கப் பல ஆய்வுகள் செய்து பல சிக்கல்களை விடுவித்துள்ளார். இது ஆய்வு நூல் மட்டுமன்று ஐயனாரைப் பற்றிய பல அரிய தகவல்களை அறியத் தரும் ஞானப்பெட்டகம்.

  விநாயகர் வழிபாடு தோன்றி பரவு முன்னாக ஐயன் வழிபாடு தமிழ்நாட்டில் நிலவிற்றென்னும் கருத்தை ஆய்வுகளோடு நிறுவி, ஐயன் தனி ஆலயங்கள் விநாயகர் ஆலயங்களைக் காட்டிலும் தமிழகத்தில் அதிகம் என்பதை நேரில் ஆய்ந்து செய்திகளைத் திரட்டி கொடுத்துள்ளார். குறிப்பாக இதில் உத்தண்ட ஐயனார் குறித்த பல தகவல்களும், பதிகமும், அட்டோத்திரங்களும் இணைக்கப்பட்டுள்ளது. இந்நூலை சிவாலயம் தம் செம்பதிப்பாக வெளியிட்டுள்ளது.    

Related products

...
திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும்
Price: Rs. 2,200

By: உரையாசிரியர்: கோ.வடிவேலு செட்டியார்

...
யாழ் நூல்
Price: Rs. 1,500

By: விபுலானந்த அடிகளார்

...
TIRUKKURAL
Price: Rs. 750

By: மொழிபெயர்ப்பும், உரையும் : திருவாசகமணி கே.எம்.பாலசுப்பிரமணியம்

...
ஒளி திகழும் ஒற்றியூர்

By: மா.கி.இரமணன்