By: உரையாசிரியர்: கோ.வடிவேலு செட்டியார்
திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும் ஆசிரியர் : கோ.வடிவேலு செட்டியார் அவர்கள் இயற்றிய தெளிபொருள் விளக்கமும், கருத்துரையும், குறிப்புரையும்
பதிப்பாசிரியர்: சிவாலயம் ஜெ. மோகன்
திருவள்ளுவ நாயனார் அருளிச் செய்த திருக்குறள் நூலுக்கு முற்காலத்தே பதின்மர் உரை கண்டனர் என்பர் பெரியோர். மேலும் சிலர் உரை கண்டிருத்தல் கூடும். இவ்வுரை யாவற்றுள்ளும் பரிமேலழகர் உரையே தலைசிறந்தது என்பது யாவருக்கும் ஒப்ப முடிந்த உண்மையாம். திருக்குறள் நடையோ எளிது. ஆனால் பரிமேலழகர் உரையோ அரிது. முதல் நூலை விட உரைநூல் உணர்வதற்கு அரிதாய் அமைந்துள்ள அற்புதமான நூல் இது. இரண்டு தொகுதிகளாய் இந்நூல் வெளிவந்துள்ளது. கோ.வடிவேலு செட்டியார் தமிழ் செய்த தவப் பயனாய் தோன்றியவர். அவரொத்த புலமையாளரை எவ்வளவு தேடினும் தமிழ் உலகில் காண இயலாது. தமிழிலும் வடமொழியிலும் மிகுந்த புலமை பெற்றவர். திருக்குறளின் ஆழ அகல நீளங்களை அளந்து காட்டி நம்மை வியப்பில் ஆழ்த்தியவர் பரிமேலழகர் என்றால் அப்பரிமேலழகரின் வியத்தகு அறிவினையும் நுண்மாண் நுழைப்புலத்தினையும் தம் கூர்த்தமதியால் நிறுத்திக் காட்டி நம்மை வியப்பின் எல்லையில் நிறுத்தியவர் பெரும் புலவர் கோ. வடிவேலு செட்டியார் அவர்கள். பல உரைநூல்கள் திருக்குறளுக்கு எழுந்திருந்தாலும் இந்த உரை நூல் தமிழ் உலகம் போற்றக்கூடிய அற்புதமான நூல். இதனை சிவாலயம் வெளியிட்டுள்ளது.
By: உரையாசிரியர்: கிருஷ்ணாம்பேட்டை கி.குப்புசாமி முதலியார்
By: உரையாசிரியர்: சூ.சுப்பராயநாயகர்
By: தணிகைமணி வ.சு. செங்கல்வராய பிள்ளை
By: ஸ்ரீ கயிலாய பரம்பரைத் திருவண்ணாமலை ஆதீனம் ஸ்ரீ அமுர்தலிங்கத் தம்பிரான்